துலாம் ராசிக்காரர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் காணலாம். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். எதிர்ப்புக்கள் குறையும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். ஜோதிடம், ஆன்மிகம், த்யானம், யோகா சம்பந்தமான துறைகளைச் சேர்ந்தவர்களின் நிலை உயரும். திரவப் பொருட்கள் லாபம் தரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும்.
அரசுப்பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். செவ்வாய், சனி ஆகியோர் ஜன்ம ராசியிலும், ராகு 12-லும் உலவுவதால் எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடவும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 7, 10
திசைகள்: வடமேற்கு, வடக்கு, கிழக்கு
நிறங்கள்: மெரூன், பச்சை, வெண்மை, ஆரஞ்சு
எண்கள்: 1, 5, 7
பரிகாரம்: துர்கை, முருகன், ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்வது நல்லது. ஏழைப் பெண்களுக்கு உதவவும்.
விருச்சிக ராசிக்காரர்களே
உங்கள் ராசிக்கு 9-ல் குரு, சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பது விசேஷம். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும். நல்ல தகவல் வந்து சேரும். எதிர்ப்புக்கள் குறையும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். பெரியவர்கள், தனவந்தர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும்.
தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். கணவன்-மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். 8-ம் தேதி முதல் புதன் 10-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்களின் நிலை உயரும். 12-ல் சனியும் செவ்வாயும் உலவுவதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கனம் தேவை. சகோதர நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 7, 10, 13
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: பொன் நிறம், வெண்சாம்பல் நிறம், இளநீலம்
எண்கள்: 3, 4, 6
பரிகாரம்: சுப்பிரமணியரையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும். கால் ஊனமுள்ளவர்களுக்கும் ஆதரவு இல்லாதவர்களுக்கும் உதவி செய்வது நல்லது.
தனுசு ராசிக்காரர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதன், சுக்கிரன், 10-ல் ராகு, 11-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பது சிறப்பு. பணப் புழக்கம் கூடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். பேச்சில் திறமை வெளிப்படும். நல்ல தகவல் வந்து சேரும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களது சந்திப்பு நிகழும். புதியவர்கள் தொடர்பு பயன்படும். இயந்திரப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். தொழிலாளர்கள் நிலை உயரும். விவசாயிகளுக்கு ஆதாயம் அதிகரிக்கும். எதிரிகள் விலகுவார்கள். ராசிநாதன் குரு 8-ல் சூரியனுடன் கூடியிருப்பதால் உடல் நலனில் கவனம் தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும். 8-ம் தேதி முதல் புதன் 9-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. தந்தை நலனில் கவனம் தேவை. தர்ம சிந்தனை உண்டாகும். வாழ்க்கைத்துணையால் அனுகூலம் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 7, 10, 13
திசைகள்: தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: நீலம், சிவப்பு, புகை நிறம், பச்சை, இளநீலம், வெண்மை
எண்கள்: 4, 5, 6, 8, 9
பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும். வேதம் படிப்பவர்களுக்கும் அந்தணர்களுக்கும் உதவவும். தந்தை வழி உறவினர்களுக்கு உதவவும்.
மகர ராசிக்காரர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 7-ல் குரு, 10-ல் செவ்வாய், சனி உலவுவதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நல்லவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். நற்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் முன்னேற்றம் காண்பார்கள். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும். வாழ்வில் முன்னேற்றம் காண வாய்ப்புக்கள் கூடிவரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும்.
பண வரவு அதிகரிக்கும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். இயந்திரப் பணியாளர்களுக்கு ஆதாயம் கூடும். வாரப் பின்பகுதியில் முக்கியமான எண்ணம் நிறைவேறும். குடும்ப நலம் சிறக்கும். 7-ல் சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோர் இருப்பதால் கணவன்-மனைவி இடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். கூட்டாளிகளிடம் சுமூகமாகப் பழகுவது நல்லது. 8-ம் தேதி முதல் புதன் 8-ம் இடம் மாறுவதால் வியாபாரத்தில் அபிவிருத்தி காண வழிபிறக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்:ஆகஸ்ட் 10, 13
திசைகள்: வடகிழக்கு, மேற்கு, தெற்கு, வடமேற்கு
நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம்
எண்கள்: 3, 7, 8, 9
பரிகாரம்: சுமங்கலிப் பிரார்த்தனை செய்து கொள்வது நல்லது. சக்தி வழிபாடு நலம் தரும்.
கும்ப ராசிக்காரர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், புதன் உலவுவதால் நிர்வாகத் திறமை பளிச்சிடும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு வரவேற்பு கூடும். வியாபாரம் பெருகும். கடல் வாணிபம் லாபம் தரும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புடன் இருக்கவும்.
பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. கணவன்-மனைவி உறவு நிலை சீராக இராது. ஆடவர்களுக்குப் பெண்களால் சங்கடங்கள் சூழும். கலைஞர்கள் விழிப்புடன் செயல்படவும். போட்டியாளர்களாலும் பொறாமைக்காரர்களாலும் தொல்லைகள் அதிகரிக்கும். எச்சரிக்கை தேவை. புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 7, 13 சுமாரானவை
திசைகள்: கிழக்கு, வடக்கு
நிறங்கள்: பச்சை, ஆரஞ்சு
எண்கள்: 1, 5
பரிகாரம்: நவக்கிரக வழிபாடு நலம் சேர்க்கும். பெரியவர்களிடம் பணிவோடு பழகவும். ஏழைப் பெண்களுக்கு உதவி செய்யவும்.
மீன ராசிக்காரர்களே
உங்கள் ராசி 5-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் மனத்துக்கினிய சம்பவங்கள் நிகழும். பிள்ளைகளால் உங்களுக்கும் உங்களால் பிள்ளைகளுக்கும் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள், கலைஞர்களின் நிலை உயரும். பெண்களுக்கு மன உற்சாகம் கூடும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும்.
கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். மகப்பேறு பாக்கியம் கிட்டும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். கடல் சார்ந்த தொழிலில் அபிவிருத்தி காணலாம். வாரப் பின்பகுதியில் சுபச் செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்வீர்கள். செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். என்றாலும் குரு பலம் ஓங்கியிருப்பதால் சமாளித்து விடுவீர்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 7, 10
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு
நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம்
எண்கள்: 3, 6
பரிகாரம்: துர்கை, சுப்பிரமணியர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு அர்ச்சனை செய்வது நல்லது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவும். ஹனுமன் சாளிஸா படிப்பதும் கேட்பதும் நல்லது.