சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் ஏராளமானோர் நேற்று குருசாமியிடம் மாலை அணிந்து கொண்டனர். | படங்கள்: ம.பிரபு | 
ஆன்மிகம்

கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

செய்திப்பிரிவு

சென்னை: சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​கள் கார்த்​திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்​கினர். இதனால், சென்​னை​யில் உள்ள ஐயப்​பன் கோயில்​களில் பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது.

கேரளா​வில் உள்ள சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் ஆண்​டு​தோறும் கார்த்​தி​கை, மார்​கழி மாதங்​களில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை​யும், அதைத் தொடர்ந்​து, தைமுதல் தேதி மகரஜோதி தரிசன​மும் விமரிசை​யாக நடை​பெறும்.

          

இந்​நிலை​யில், கார்த்​திகை மாதத்​தின் முதல் நாளான நேற்று மண்டல பூஜை தொடங்​கியது. இதையொட்​டி, சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நேற்று அதி​காலை 3 மணிக்கு நடை திறந்​து, தீபா​ராதனை காட்​டப்​பட்டு சுவாமி தரிசனத்​துக்கு பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

பொது​வாக, மார்​கழி, தை மாதங்​களில் சபரிமலை செல்​லும் பக்​தர்​கள் கார்த்​திகை முதல் நாளில் மாலை அணிவது வழக்​கம். ஒரு மண்டல காலம் (41 நாட்​கள்) விரதம் இருக்​கும் அவர்​கள், பின்​னர் இரு​முடி கட்​டிக்​கொண்​டு, பாத​யாத்​திரை​யாக சென்று ஐயப்​பனை தரிசனம் செய்​வார்​கள். நேற்று கார்த்​திகை முதல் நாள் என்​ப​தால், ஏராள​மான பக்​தர்​கள் மாலை அணிந்​தனர்.

இதனால், சென்னை கோடம்​பாக்​கம் மகாலிங்​கபுரம், கே.கே.நகர், அண்ணா நகர், ராஜா அண்​ணா​மலைபுரம், நங்​கநல்​லூர், மடிப்​பாக்​கம், மாதவரம் பால் பண்ணை உட்பட பல்​வேறு பகு​தி​களில் உள்ள ஐயப்​பன் கோயில்​களி​லும் நேற்று அதி​காலை முதலே பக்​தர்​கள் கூட்​டம் அதி​கரித்​துக் காணப்​பட்​டது.

முதல்​முறை​யாக சபரிமலைக்​குச் செல்​லும் கன்​னி​சாமிகள், சிறு​வர்​கள் முதல் பெரிய​வர்​கள் வரை ஏராள​மான பக்​தர்​கள் நீண்ட வரிசை​யில் காத்​திருந்​தனர். அவர்​களுக்கு குரு​சாமிகள் மாலை அணி​வித்​தனர். ‘சாமியே சரணம் ஐயப்​பா’ என்று கோஷத்​துடன் மாலை அணிந்​து​கொண்ட பக்​தர்​கள்​, ஐயப்​பனை தரிசித்​து, விரதத்​தை தொடங்​கினர்​.

SCROLL FOR NEXT