தங்க குஞ்சிதபாதம் 
ஆன்மிகம்

நடராஜருக்கு வைரம் பொருத்திய தங்க குஞ்சிதபாதம்: ரூ.10 லட்சம் மதிப்பில் பக்தர் வழங்கினார்

செய்திப்பிரிவு

சிதம்பரம்: சிதம்பரத்தில் உலக பிரசித்திப் பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வெளிநாடு, வெளி மாநில, வெளி மாவட்ட மற்றும் உள்ளூர் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வதுண்டு. இங்கு ஸ்ரீ நடராஜப் பெருமான் இடது காலை தூக்கியபடி ஆனந்த தாண்டவ கோலத்தில் வீற்றுள்ளார்.

அவரது இடது காலை தூக்கிய திருவடிக்கு பொருத்த பக்தர் ஒருவர் ரூ.10 லட்சம் மதிப்பிலான வைரம் பொருத்திய தங்க குஞ்சிதபாதத்தை வழங்கி உள்ளார். கட்டளை தீட்சிதரான சம்பந்த தீட்சிதர் மூலம் கோயிலில் பூஜிக்கப்பட்டு கோயில் கமிட்டி செயலாளர் த.சிவசுந்தர தீட்சிதரிடம் நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டு, ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு பொருத்தப்பட்டது.

SCROLL FOR NEXT