ஆன்மிகம்

பிரம்மோற்சவத்தின் 6-ம் நாள்: அனுமன் வாகனத்தில் கோவிந்தர் வீதியுலா

என். மகேஷ்குமார்

திருப்பதி கோவிந்தராஜர் கோயில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை அனுமன் வாகனத்தில் உற்சவர் எழுந்தருளினார்.

திருப்பதியில் புகழ்பெற்ற கோவிந்தராஜர் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் மாட வீதிகளில் கோவிந்தர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை அனுமன் வாகனத்தில் உற்சவ மூர்த்தி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.

இதையடுத்து மாலையில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இரவு கஜ வாகனத்தில் கோவிந்தர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான உயர் அதிகாரிகள், நடனக் குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT