கோப்புப் படம் 
ஆன்மிகம்

சபரிமலையில் ஒரு மணி நேரம் கொட்டிய மழை

செய்திப்பிரிவு

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 14-ம் தேதி மாலை மாதாந்திர பூஜைக்காக திறக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக அங்கு வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் ஐயப்ப பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று பிற்பகலில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து சாரலாகப் பெய்த மழை வலுவடைந்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டிய மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் பத்தினம்திட்டா, ஆலுவா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

SCROLL FOR NEXT