ஆன்மிகம்

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஸ்ரீ விஜயேந்திரர் புனித நீராடினார்

செய்திப்பிரிவு

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவை முன்னிட்டு, திரிவேணி சங்கமத்தில் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புனித நீராடினார்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இதுவரை 62 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். வரும் 26-ம் தேதி கும்பமேளா நிறைவடைய உள்ளது. இந்நிலையில், கும்பமேளாவையொட்டி, திரிவேணி சங்கமத் தில் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று புனித நீராடினார். கர்நாடக மாநிலம் சகடபுரம் மடத்தின் ஸ்ரீகிருஷ்ணானந்த தீர்த்த சுவாமிகளும் புனித நீராடினார்.

ஸ்ரீவிஜயேந்திரர் அங்கு கங்காபூஜைநடத்தி, உலக நலன், அமைதிக் காக பிரார்த்தனை செய்தார். வேத பண்டிதர்களுக்கு தட் சிணை வழங்கினார். பக்தர்களுக்கு அருளாசி வழங்கி பேசிய அவர். "கும்பமேளா நமது சனாதன தர்மத்தின் அடையாளமாக திகழ்கிறது. தேசிய ஒருமைப்பாடு. கலாச்சார சிறப்பை பிரதிபலிக் கிறது. இது பாரதத்தின் சொத்து" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT