ஆன்மிகம்

ராமர் கோயில் முதலாம் ஆண்டு விழா: அயோத்தியில் கோலாகலமாக தொடங்கியது

செய்திப்பிரிவு

அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படு வருகிறது. இக்கோயிலில் கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி மூலவர் ஸ்ரீ பாலராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவை தொடர்ந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாலராமரை தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிராண பிரதிஷ்டை நிகழ்வின் முதலாம் ஆண்டு விழாவை இந்து பாரம்பரிய நாட்காட்டி அடிப்படையில் ஜனவரி 11 முதல் 3 நாள் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதன்படி முதலாம் ஆண்டு விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.

பாலராமர் சிலைக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அபிஷேகம் செய்ய, யஜுர்வேத பாராயணத்துடன் இவ்விழா தொடங்கியது. இதையடுத்து மதியம் 12.20 மணிக்கு மகா ஆரத்தி நடைபெற்றது. அப்போது 56 வகையான பிரசாதங்கள் குழந்தை ராமருக்கு படைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT