ஆன்மிகம்

ராமேசுவரம் கோயிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா ஜன.4-ல் காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

எஸ். முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா ஜன.4-ல் காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மார்கழி மாதத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் திருவிழா ஜனவரி 4 சனிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. தினந்தோறும் ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு காலை மற்றும் மாலையில் மாணிக்கவாசகர் தங்ககேடயத்தில் மூன்றாம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சியும், நடராஜருக்கு தினமும் சிறப்பு மகா தீப ஆராதனை பூஜையும் நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற ஜனவரி 13 அன்று அதிகாலை ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நடராஜருக்கும், அம்பாளுக்கும் தங்கக் கவசம் அணிவிக்கப் பட்டு சிறப்பு மகா தீப ஆராதனை பூஜைகள் நடைபெறும்.

SCROLL FOR NEXT