திருப்பதி: திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக ஏற்கெனவே ரூ.300 மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியாகிவிட்டன. இந்நிலையில், சொர்க்க வாசல் வழியாக சென்று ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்ய வரும் 9-ம் தேதி அதிகாலை 5 மணி முதல் திருப்பதியில் ராமச்சந்திரா புஷ்கரணி, பூதேவி காம்ப்ளக்ஸ் (அலிபிரி) உட்பட மொத்தம் 9 இடங்களில் 91 மையங்கள் அமைத்து இலவச டோக்கன்கள் வழங்கப்படும். ஆதார் அட்டையை காண்பித்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும். டோக்கன் இல்லாமல் ஏழுமலையானை தரிசிக்க இயலாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.