ஆன்மிகம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

செய்திப்பிரிவு

திருப்பதி: பிரசித்தி பெற்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உற்சவரான பத்மாவதி தாயார் நேற்று காலை மேள தாளங்களுடன் கொடிமரம் வரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டார். பின்னர், வேத பண்டிதர்களால் வேதங்கள் முழங்க, மங்கள வாத்தியங்களுடன் பிரம்மோற்சவ கொடி தங்கக் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆந்திர மாநில அரசு தரப்பில் இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் ஆனம் ராம் நாராயண ரெட்டி, தாயாருக்கு பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்து வந்தபடி காணிக்கையாக சமர்ப்பித்தார். கொடியேற்றத்தை தொடர்ந்து, பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்றிரவு சின்ன சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

SCROLL FOR NEXT