திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக நெய் காணிக்கை விற்பனையை நேற்று தொடங்கி வைத்த ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன். 
ஆன்மிகம்

அண்ணாமலையார் கோயில் தீப திருவிழாவுக்காக நெய் காணிக்கை விற்பனை தொடக்கம்: சலுகை விலையில் வழங்க ஆவின் நடவடிக்கை

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக நெய் காணிக்கை விற்பனையை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிச.1-ம் தேதி தொடங்குகிறது. டிச.4-ம் தேதி கொடியேற்றமும், அதையடுத்து, 10 நாள் உற்சவமும் நடைபெறஉள்ளது. முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபத் திருவிழா டிச.13-ம்தேதி நடைபெறவுள்ளது. மகா தீபம்ஏற்ற சுமார் 4,500 கிலோ நெய், 1,000 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்படும்.

இதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் நெய் காணிக்கைக்கான விற்பனையை ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று காலை தொடங்கி வைத்தார். ஒரு கிலோ நெய் ரூ.250, அரை கிலோ நெய் ரூ.150 மற்றும் 250 கிராம் நெய் ரூ.80 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளி சந்தையில் ஒரு கிலோ நெய் ரூ.700-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தீபத் திருவிழாவுக்காக ஆவின் மூலம் சலுகை விலையில் நெய் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராம் பிரதீபன், கோயில் இணை ஆணையர் ஜோதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக நெய் காணிக்கை விற்பனையை நேற்று தொடங்கி வைத்த ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன்.

SCROLL FOR NEXT