சென்னை: குலசை தசரா திருவிழாவை முன்னிட்டு, சென்னை, கோவையில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் இன்று (அக்.3) வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் நடைபெறவுள்ள தசரா திருவிழாவை முன்னிட்டு அக்.16-ம் தேதி வரை சென்னை, கோவையிலிருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டினத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலமாக நாள்தோறும் இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், திருவிழா முடிந்து திரும்புவதற்கு ஏதுவாகவும் அக்.13 முதல் 16-ம் தேதி வரை கூடுதல் பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பேருந்துகளை www.tnstc.in இணையதளம் மற்றும் tnstc செயலி மூலம் முன்பதிவு செய்து ஊர்களுக்குச் சென்று திரும்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. பேருந்து வசதிகளை பயணிகள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.