ஆன்மிகம்

ஆடி மாதத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

செய்திப்பிரிவு

சென்னை: வடபழனி முருகன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு, மீனாட்சி அம்மனுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு அபிஷேக, அலங்காரத்துடன் பூஜைகள் நடத்தப்பட உள்ளன.

சென்னை வடபழனியில் அமைந்துள்ளது முருகன் கோயில். நுாற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோயில்பக்தர்களின் வேண்டுதல் நிறைவேற்றும் ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் மீனாட்சி அம்மன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

ஆடிமாதத்தை முன்னிட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்துடன் கூடிய பூஜைகள் நடத்தப்பட உள்ளன.

அந்தவகையில், வெள்ளிக்கிழமை மாலையில் சாயரக்‌ஷை பூஜை முடிந்ததும் 6 மணி முதல் 6.30 மணி வரை லலிதாசஹஸ்ரநாம பாராயணம் நடைபெறும்.

ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று காலைமீனாட்சி அம்மனுக்கு சிறப்புபூஜை, மஞ்சக்காப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. மாலை அம்மனுக்குபுடவைசார்த்தப்பட்டு, பக்தர்களுக்கு மஞ்சக்காப்பு பிரசாதம், சுமங்கலி செட் பிரசாதமாகவிநியோகம் செய்யப்படுகிறது.

ஒவ்வொரு ஆடி வெள்ளிக்கிழமையும் இந்நிகழ்வு நடக்கிறது. ஆகஸ்ட் 7-ம் தேதி ஆடிப் பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யபடும். அன்று மாலை பெண் பக்தர்களுக்கு வளையல் பிரசாதமாக வழங்கப்படும்.

SCROLL FOR NEXT