கள்ளழகர் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. 
ஆன்மிகம்

மதுரை கள்ளழகர் கோயில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.98.62 லட்சம்

செய்திப்பிரிவு

சித்திரை திருவிழாவையொட்டி, மதுரை கள்ளழகர் கோயில் உண்டியல் மூலம் ரூ.98.62 லட்சம் காணிக்கையாக கிடைத்தது.

மதுரை கள்ளழகர் கோயிலில் சித்திரைத் திருவிழாவை யொட்டி, தற்காலிக உண்டியல் திறப்பு நேற்று நடந்தது. இதில்,கோயிலின் துணை ஆணையர் கலைவாணன், மதுரை உதவி ஆணையர் வளர்மதி, மேலூர் சரக ஆய்வாளர் அய்யம்பெருமாள் மற்றும் கோவில் அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், மீனாட்சி, அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, கோயில் கண்காணிப்பாளர்கள் , பணியாளர்கள் பங்கேற்றனர்.

இதில், பக்தர்கள் காணிக்கையாக ரூ. 98,62,978 ரொக்கம், நகையாக 9 கிராம் தங்கம் , 175 கிராம் வெள்ளி, ஆகியன கிடைக்கப்பெற்றதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT