ஆன்மிகம்

திருமலையில் நாளை ஸ்ரீராம நவமி ஆஸ்தானம்

செய்திப்பிரிவு

திருமலை: ஸ்ரீராமரின் ஜெயந்தி தினமான ஸ்ரீராம நவமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஏப். 17) சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. காலையில் ரங்கநாயக மண்டபத்தில் சீதா, லட்சுமணர், அனுமன் சமேத ஸ்ரீராமருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மாலை 6.30 மணியளவில் அனுமன் வாகனத்தில் கோதண்டராமர் மாடவீதிகளில் பவனி வந்துபக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இரவு, கோயில் வளாகத்தில் ஸ்ரீராம நவமி ஆஸ்தானம் ஜீயர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை மாலை சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுநாள் 18-ம் தேதி இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீராமர் பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT