திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஐரோப்பிய கண்டத்திலுள்ள எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த 32 பேர் தரிசனம் செய்தனர். மூலவரான நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளை வழிபட்டனர். ஆண்கள் தங்கள் நெற்றியில் திருநீறு பூசியும், பெண்கள் நெற்றில் குங்குமம் இட்டும் வழிபட்டனர்.
பின்னர் அவர்கள் குறுக்குத் துறையில் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்று, படித்துறையில் ஆற்று நீரை வணங்கினர். தமிழகத்திலுள்ள பல்வேறு கோயில்களுக்கு சென்று வரு வதாகவும், இங்குள்ள கலாச்சாரம், மொழி, பழக்க வழக்கங்கள் அனைத்தும் மிகவும் பிடித்துள்ளதாகவும் தெரிவித்தனர். முன்னதாக இவர்கள் திருச்செந்தூர், திருத்தணி, சுவாமி மலை, திருப்பரங்குன்றம் கோயில்களுக்கு சென்று வந்துள்ளனர்.