திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. இவ்வாண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் மாலையில் கொடியேற்றத்துடன் தொடங் கியது. முன்னதாக புனித அந்தோனியார் உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை பங்கு ஆலயமான பரிசுத்த அதிசய பனிமாதா போராலயத்தில் இருந்து கோயில் தர்மகர்த்தா ஜெபஸ் டின் ஆனந்த் தலைமையில் கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர்மக்கள் எடுத்து வந்தனர்.
இந்த புனித கொடியை குருவானவர்கள் ஜெபநாதன், ரூபன் ஆகியோர் ஜெபம் செய்து அர்ச்சித்தனர். பின்னர் தர்மகர்த்தா கொடியேற்றினார். இதையடுத்து மாலையில் நற்கருணை ஆராதனை நடை பெற்றது. அருட்தந்தை மணி மறையுரை வழங்கினார். திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும், இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது.
வரும் 14-ம் தேதி 7-ம் நாள் திருவிழாவன்று இரவு உணவு திருவிழா நடைபெறுகிறது. அடுத்த நாள் காலை சிறப்பு திருப்பலியும், தொடர்ந்து பகலில் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகிறது. விழாவின் 9-ம் நாளான 16-ம் தேதி இரவு மறையுரை, நற்கருணை ஆசீர்வாதத்துக்கு பின்னர், இரவு 11 மணிக்கு புனித அந்தோனியாரின் தேர் பவனி நடைபெறுகிறது.
வரும் 17-ம் தேதி காலை 5.30 மணிக்கு அருட் தந்தை ஒய்.தேவராஜன் தலைமை யில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு புனிதரின் தேர் பவனியும், தொடர்ந்து தனித் திறன் போட்டிகளும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தர்ம கர்த்தா தலைமையில் பங்குத் தந்தை ஜெரால்டு எஸ்.ரவி, உதவி பங்குத் தந்தை ஜாண் ரோஸ் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.