ஆன்மிகம்

மயிலாப்பூரில் இன்று ஐயப்பன் மலர் வழிபாடு

செய்திப்பிரிவு

சென்னை: மயிலாப்பூரில் ஐயப்பன் மலர் வழிபாடு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மகா சிவராத்திரி, நவராத்திரி விழா, பவுர்ணமி திருவிளக்கு பூஜை, ஐயப்பன் மலர் வழிபாடு போன்ற சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், 2024-ம் ஆண்டுக்கான ஐயப்பன் மலர் வழிபாடு இன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது இந்த மலர் வழிபாட்டின்போது, 40 ஆண்டுகளுக்கும் மேலாகசபரிமலைக்கு சென்று வந்த 108 குருசாமிகள் பாராட்டி கவுரவிக்கப்படுகிறார்கள்.

அதைத் தொடர்ந்து, ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனையும், இசைக் குழுவினரின் ஐயப்பன் பக்தி பாடல்களும், நாட்டிய நாடகமும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுவதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT