ஸ்ரீ காட்டம்மாராஜலு கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் கணபதி ஹோமம் நடைபெற்றது. 
ஆன்மிகம்

காட்டம்மாராஜலு கோயிலில் குடமுழுக்கு விழா

செய்திப்பிரிவு

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் துத்திப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மேல் கன்றாம்பள்ளி கிராமத்தின் கிழக்கு பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த காட்டம்மாராஜலு கோயில் உள்ளது.

இப்பகுதியில் பிரசித்திப் பெற்ற இந்த கோயிலின் பராமரிப்பு பணிகள் நடந்து முடிந்ததை தொடர்ந்து கோயில் குடமுழுக்கு விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு, நேற்று காலை 5 மணியளவில் மகா கணபதி ஹோமமும், காலை 6 மணிக்கு நவகிரக பூஜையும், காலை 7 மணிக்கு மகா பூர்ணா ஹூதி, யாத்ரா தானம், சங்கல்பம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாக ஸ்ரீ காட்டம்மாராஜலு கோயில் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது.

இதையடுத்து, காலை 9.15 மணிக்கு ஸ்ரீ கங்கம்மாவுக்கு சிறப்பு பூஜையும், மகா அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் கலச நீர் ஊற்றப் பட்டது. கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி ஆம்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்களும், இளைஞர்களும் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT