ஆன்மிகம்

யார் நல்லவர்?

பாவ்லோ கொய்லோ

ரோப்பிய கிராமம் ஒன்றில் வசித்து வந்த ரொட்டிக்கடைக்காரன் ஒருவன், தனது ஊருக்கு ஒரு ஞானி வந்திருப்பதாகக் கேள்விப்பட்டான். அவரை இரவு உணவுக்கு அழைத்தால் அவரைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ளலாமென்று நினைத்து, அவரைத் தன் பணியாள் வழியாக விருந்துக்கு அழைத்தான்.

ரொட்டிக்கடைக்காரன் விருந்துக்கு அழைத்த தேதிக்கு முந்தைய தினம், அந்த ஞானி ஒரு பிச்சைக்காரனைப் போல ரொட்டிக்கடைக்குச் சென்றார். அங்கிருந்த ஒரு ரொட்டியை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார். அதைப் பார்த்து கோபம் கொண்ட ரொட்டிக்கடைக்காரன் அவரை அடித்து அங்கிருந்து துரத்திவிட்டான்.

அடுத்த நாள், அந்த ஞானியும் அவரது சீடரும் ரொட்டிக்கடைக்காரனின் ஆடம்பர வீட்டுக்கு விருந்துக்குச் சென்றனர். அங்கே வகை வகையாக உணவும் கனிகளும் மது வகைகளும் இருந்தன.

விருந்தின் நடுவில் சீடன் ஒரு சந்தேகம் கேட்டான். தீய மனிதனைப் பிரித்தறிவது எப்படி என்பதுதான் அவன் கேட்ட கேள்வி.

“இந்த ரொட்டிக்கடைக்காரனைப் பார். ஒரு இரவு விருந்துக்கு பத்து தங்க நாணயங்களை இவனால் செலவழிக்க முடியும். ஆனால் ஒரு பசித்த யாசகனுக்கு ஒரு ரொட்டித் துண்டைத் தர மனம் வராது.” என்று ரொட்டிக்கடைக்காரனின் காதில் கேட்க பதிலளித்தார்.

SCROLL FOR NEXT