ஆன்மிகம்

வள்ளியூர் முருகன் கோயிலில் கார்த்திகை தெப்பத் திருவிழா

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் முருகன் கோயிலில் கார்த்திகை தெப்பத் திருவிழா நேற்று முன்தினம் இரவில் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

குகை கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக வள்ளியூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக் கிழமை நடைபெறும் தெப்பத் திருவிழாவும் ஒன்றாகும். நேற்று முன்தினம் காலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து இரவு 11 மணிக்கு முருக பெருமான் வள்ளி தேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி 11 வளையம் சுற்றி வந்தார். நிகழ்ச்சியில் வள்ளியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நள்ளிரவில் முருகபெருமான் வள்ளி தேவியுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அருளினார்.

SCROLL FOR NEXT