ஆ
தம்பாக்கத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், பாம்பு வசித்த புற்றுக்கு அருகில் ஸ்ரீதேவி நாகமுத்து மாரியம்மனின் சூலத்தை நட்டு, மேற்கூரை அமைத்து பக்தர்கள் பூஜித்து வந்தார்கள்.
ஒருமுறை மகாபெரியவர் இந்த ஆலயத்துக்கு வந்தபோது ஒரு விபத்து காரணமாக மேற்கூரை கூட இன்றி சூலம் நிற்பதைக் கண்டு, மீண்டும் மேற்கூரை கட்டப் பணித்து சங்கர மடம் சார்பாக முதல் நன்கொடையைக் கொடுத்தாராம். தற்போது அக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவிஸ்வரூப சர்வமங்கள சனீஸ்வரனைக் தரிசனம் செய்ய சுமார் முப்பத்தைந்தாயிரம் பேர் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வருவதாக இத்திருக்கோயிலின் பக்த ஜன சபா அறங்காவலர் குழு செயலர் எஸ். சங்கர் கணேஷ் தெரிவிக்கிறார்.
ஸ்ரீதேவி நாகமுத்து மாரியம்மன் கோயிலில் நவகிரகங்கள், அய்யப்பன், ஆஞ்சநேயர், துர்க்கை, வைஷ்ணவி, சாமுண்டீஸ்வரி, தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு சந்நிதிகள் அமைக்கப்பட்டு ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இச்சந்நிதிகளைத் தவிர ஸ்ரீவிஸ்வரூப சர்வமங்கள சனீஸ்வர பகவான் ஆறரடி உயரம் கொண்டு இத்திருக்கோயிலில் விளங்குகிறார். இந்த ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி நடைப்பெற்ற சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு முதல் நாள் 18-ம் தேதி சனிக் கிரக சாந்தி ஹோமம் நடைபெற்றது.