ஒப்பிலியப்பன் கோயில், வேங்கடாசலபதி கோயிலில் நடைபெற்ற 108-ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ பெருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பூமிதேவி உடனாய பொன்னப்பர். 
ஆன்மிகம்

ஒப்பிலியப்பன் கோயிலில் 108-ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ பெருவிழா

செய்திப்பிரிவு

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் ஒப்பிலியப்பன் கோயில், வேங்கடாசலபதி கோயிலில் 108-ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ பெருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

பூமிதேவியின் அவதார தலமான இக்கோயிலில், மகாவிஷ்ணு, ஒப்பிலியப்பனாய் திருவிளையாடல் புரிந்து பூமிதேவியை மணம் புரிந்தார். அந்தத் திருமண நாளான ஐப்பசி திருவோண நட்சத்திரத்தன்று, ஆண்டுதோறும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, நிகழாண்டு திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, பூமிதேவி உடனாய பொன்னப்பர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். நவ.3-ம் தேதி வரை நடைபெறும் இந்த உற்சவ விழாவில் பல்வேறு இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

SCROLL FOR NEXT