ஆன்மிகம்

குலசேகரன்பட்டினம் தசரா விழா: அக்.24, 25-ல் மதுக்கடைகள் மூடல்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு வரும் 24, 25-ம் தேதிகளில் குலசேகரன்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 27 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அன்றைய தினங்களில் மதுபான விற்பனை ஏதும் நடைபெறக் கூடாது. மதுபான விற்பனை, மதுபானத்தை கடத்துதல், பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT