ஆன்மிகம்

முக்திப்பேறு அளிக்கும் வேலூர் காசி விஸ்வநாதர்

வ.செந்தில்குமார்

இந்துக்களின் புனிதமான நகரங்களில் மிக முக்கியமானது காசி. முக்தித் தலமான காசிக்குச் சென்று விஸ்வநாதரைத் தரிசிப்பதை வாழ்நாள் கடமையாக இந்துக்கள் கருதுகின்றனர்.

அமைதியில் தோய்ந்த மலையடிவாரம், இடைவிடாமல் கேட்கும் காட்டுப் பறவைகளின் ஒலிக்கு நடுவே வேலூர் மாநகரிலும் ஒரு காசி விஸ்வநாதர் உறைகிறார்.

14chsrs_kalabairava பைரவர் சிலைright

இந்தக் கோயிலின் மீது டிசம்பர் 19-ம் தேதி, செவ்வாய்கிழமையன்று தனிக்கவனம் குவியப்போகிறது. சனிப் பெயர்ச்சி நாளான அன்று நடக்கப் போகும் சிறப்பு யாகம்தான் அதற்குக் காரணம். கர்மவினைகளைத் தொலைத்து தூய புது வாழ்க்கை தொடங்க அருள்தரும் காசி விஸ்வநாதரின் தனிச் சிறப்புக் கோவில் என்பதால், சனிப் பெயர்ச்சி யாக ஏற்பாடுகளும் தடபுடலாகத் தொடங்கியிருக்கிறது.

மோட்சத்துக்கு வழிகாட்டும் காசி விஸ்வநாதர் ஆலயம், வேலூர் சமணர் குட்டை என்ற அம்மணாங்குட்டை பகுதியில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய காசி விஸ்வநாதர் கோயிலுக்கென்று தல வரலாறு இல்லை. சித்தர்கள், மகான்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாகக் கோயிலைச் சுற்றிலும் ஜீவ சமாதிகள் அமைந்துள்ளன.

கஜேந்திரகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் மூலிகைகள் நிறைந்த வனத்தையொட்டி அமைந்துள்ளது. கோயிலுக்கு அருகிலிருக்கும் குளத்தில் கோடைக் காலத்திலும் நீர் நிறைந்திருக்கும் சிறப்பு வாய்ந்தது. கோயில் தல விருட்சமாக பல நூறு ஆண்டுகள் பழமையான இலுப்பை மரம் நெடுநெடுவென வளர்ந்து நிற்கிறது.

கோயில் வளாகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்புவரை மகான்கள் பலர் தங்கள் சீடர்களுடன் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. உணவுக்காக அம்மணாங்குட்டையைச் சுற்றியுள்ள சலவன்பேட்டை, கொசப்பேட்டை, நல்லான்பட்டறை, வேலப்பாடி பகுதிகளுக்கு அன்னதானம் பெற்றுச் செல்வார்களாம். மகான்களுக்காகவே வீட்டில் தனியாக சமைத்த உணவை தானமாக அளிப்பதை மக்கள் தங்களது கடமையாக வைத்திருந்தனர்.

14chsrs_lead11 காசி விஸ்வநாதர்

“காசி விஸ்நாதர் கோயிலில் தங்கியிருந்த மகான்கள் பலர் நோய் தீர்க்கும் மூலிகை மருந்துகளை வழங்கியுள்ளனர். கோயிலுக்கு அருகில் உள்ள பெரிய பாறையில் சஞ்சீவி மலையை தூக்கிச் செல்லும் ஆஞ்சநேயரின் உருவத்தை செதுக்கியுள்ளனர். கோயில் வளாகத்தில் 11 அடி உயரமுள்ள புற்று வளர்ந்துள்ளது.

ஒரு மண்டலத்துக்குப் புற்றைச் சுற்றி வந்து தீபமேற்றி வழிபடுவது நாகதோஷத்தைப் போக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது” என்கிறார் இந்தக் கோயில் சார்ந்த நலப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் கவிஞர் இரா. நக்கீரன்.

‘அள்ள அள்ளக் குறையாத செல்வம் தரும் கல்லாலம்’ என்ற வாசகத்தால் கல்லால மரத்தின் சிறப்பு அறியப்படுகிறது. உலக நன்மைக்காக தென்முக தியானத்தில் அமர்ந்திருக்கும் குருபகவான் அமர்ந்துள்ள மரம் கல்லால மரம் என்பது சிறப்புக்குரியதாகும். கோயிலுக்கு அருகிலே மயானம் அமைந்துள்ளது.

பாறைகளை இறுக்கிப் பிடித்து வேர்களைப் பரப்பும் கல்லால மரம் ஆலமரம் போன்று வளரும். விழுதுகள் மட்டும் இருக்காது. இந்தக் கல்லால மரம், காசி விஸ்வநாதர் கோயில் குளத்தின் கிழக்குக் கரையில் இருக்கும் பெரிய பாறைகளின் மீது வளர்ந்துள்ளது.`

வேலூர் மக்களின் கிராம தேவதையான ஆணைகுளத்தம்மன் இந்தக் கோயில் குளத்தில்தான் இறங்கியதாக நம்பப்படுகிறது. கொசப்பேட்டை, சலவன்பேட்டை, சைதாப்பேட்டை, அரசமரப்பேட்டை, கஸ்பா, வேலப்பாடி, நல்லான்பட்டறை பகுதிவாழ் மக்கள் ஆடி மாதம் திருவிழாவுக்காகக் காப்பு கட்டும் நிகழ்ச்சியை கோயில் குளத்தின் கரையில்தான் நடத்துகின்றனர்.

vlr-11-chandrsekaran சந்திரசேகரன், கோயில் நிர்வாகி

1975-ம் ஆண்டுக்குப் பிறகு மகான்கள் யாரும் இல்லாததால் கோயில் பராமரிப்பில்லாமல் போனது. 2002-ம் ஆண்டு சிலரது முயற்சியுடன் கோயிலைச் சீரமைத்து, கும்பாபிஷேகம் செய்தோம்.

நாகதோஷம், திருமணத் தடை தோஷங்களைப் போக்கும் தலமாக இது இருக்கிறது. கோயிலுக்கு அருகிலேயே மயானம் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றிலும் ஜீவசமாதி அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் குளத்தைச் சீர் செய்யத் தற்போது முயன்றுவருகிறோம்.

SCROLL FOR NEXT