ஆன்மிகம்

சுபிட்சம் தரும் திருவோண தரிசனம்!

வி. ராம்ஜி

திருவோணம் என்பது திருமாலுக்கு உரிய நட்சத்திரம். இந்த நட்சத்திர நன்னாளில், திருமால் வழிபாடு செய்தால், வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்கள் கிடைத்து சுபிட்சம் பொங்க வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்.

பொதுவாகவே சனிக்கிழமையில் பெருமாள் வழிபாடு அற்புதமான பலன்களை வழங்கக் கூடியது என்பார்கள். இந்த முறை சனிக்கிழமையும் திருமாலுக்கு உரிய திருவோண நட்சத்திரமும் ஒன்றாக வருகிறது. எனவே நாளைய தினம் 25ம் தேதி, சனிக்கிழமை... மறக்காமல் வேங்கடவனை மனதார வழிபடுங்கள்.

மார்பில் மகாலக்ஷ்மியைக் குடிவைத்திருக்கும் திருமால் அழகனுக்கு, துளசி மாலை சார்த்தி வணங்குங்கள். நம் வீட்டையும் சுபிட்சமாக்கி, நம் வாழ்க்கையையும் வளப்படுத்தித் தந்தருள்வார் வேங்கடவன்!

இன்னொரு விஷயம்... சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பார்கள். அதாவது சஷ்டியில் விரதம் மேற்கொண்டால், அகப்பையில்... அதாவது கருப்பையில் கரு உண்டாகும் என்று சொல்லிவைத்திருக்கிறார்கள். அதேபோல், சஷ்டியில் விரதம் இருந்தால், திருவோண நட்சத்திரம் வரும் போது அந்தப் பெண் கரு உண்டாவாள் என்பது ஐதீகம் என்று விவரிக்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

SCROLL FOR NEXT