ஆன்மிகம்

அற்பமாய் எண்ணாதே

நெல்லை ஜெயராஜ்

குழந்தையும் தெய்வமும் ஒன்றென்பர். மழலைகளின் களிப்பு உலகக் கஷ்டங்களை மறக்க அருமருந்தாக இருக்கிறது. சிறுவயதில் இப்படித்தான் வருவார் என்று கணிக்க முடியாத குழந்தைகள் உலகத்தையே ஆச்சரியப்படுத்துவதுண்டு. பெரிய ஆலமரத்தின் ஆரம்பம் சிறிய விதையில்தான் அடங்கியிருக்கிறது.

குழந்தைகளைக் குறித்து இயேசு, “ இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடி எச்சரிக்கையாக இருங்கள். அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்தில் என் பரம பிதாவின் சமூகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்கிறேன்” என்கிறார். ( மத்தேயு 18: 10)

SCROLL FOR NEXT