கல்கத்தாவில் நடந்த ஒரு பண்டிகையில் ராமகிருஷ்ண பரமஹம்சர் கலந்துகொண்டார். குழந்தைகளுக்கு வழங்குவதற்காக 1000 லட்டுகள் தயார் செய்யப்பட்டு ஓரிடத்தில் தட்டுகளில் வைக்கப்பட்டிருந்தன.
எதிர்பாராத விதமாய், அந்த லட்டுகளை எறும்புகள் சூழ்ந்துகொண்டன. பலரும் பலவிதமாக ஆலோசனை கூறத் தொடங்கினர். சிலர் லட்டுத் தட்டை எடுத்து வெயிலில் வைக்க ஆலோசனை கூறினர். சிலரோ எறும்புப் பொடியைத் தூவலாம் என்றனர்.
ராமகிருஷ்ண பரமஹம்சரோ அவர்களை எல்லாம் கையமர்த்தி லட்டுகள் வைக்கப்பட்ட தட்டுகளைச் சுற்றிச் சர்க்கரையைத் தூவச் சொன்னார். எறும்புகள் இடம்பெயர்ந்து சர்க்கரையைத் தேடிப்போய் தின்னத் தொடங்கின.
“எப்போதும் எதிரிகளையும் வாழவைத்து, நாமும் வாழ வேண்டும். எதிரிகளை அழித்து நாம் வாழும் சிந்தனை கூடாது” என்றார்.