மேஷ ராசிக்காரர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரன், 4-ல் புதன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். புதிய பொருட்கள் சேரும். வியாபாரிகள் லாபம் கூடப் பெறுவார்கள். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். பயணம் சம்பந்தமான இனங்கள் லாபம் தரும். புதியவர்களது தொடர்பால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களது திறமை பளிச்சிடும். 7-ல் செவ்வாயும் சனியும் இருப்பதால் கெட்டவர்களின் சகவாசம் கூடாது.
கணவன்-மனைவி இடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். எக்காரியத்திலும் யோசித்து, நிதானமாக ஈடுபடவும். வாரப் பின்பகுதியில் உடல் நலனில் கவனம் தேவை. மனதில் சிறு சலனம் ஏற்பட்டு விலகும். தாய் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 1, 3 (முற்பகல்)
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெண்மை, இளநீலம், பச்சை, வெளிர்கறுப்பு
எண்கள்: 4, 5, 6
பரிகாரம்: சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவும்.
ரிஷப ராசிக்காரர்களே
உங்கள் ஜன்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய், சனி, 11-ல் கேது உலவுவதால் மன மகிழ்ச்சி கூடும். பண வரவு அதிகரிக்கும். புதிய பதவி, பட்டங்கள் தேடிவரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கில் சாதகமான திருப்பம் உண்டாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும்.
விருந்து உபசாரங்களிலும் கேளிக்கை உல்லாசங்களிலும் ஈடுபாடு கூடும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். 5-ல் ராகு, 3-ல் புதன், குரு இருப்பதால் பிள்ளைகளால் பிரச்சினைகள் சூழும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் அதிக கவனம் தேவை. வியாபாரிகள் அகலக் கால் வைக்கக் கூடாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 1, 3 (முற்பகல்)
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு
நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், வெண்மை, நீலம், சிவப்பு
எண்கள்: 1, 6. 7, 8, 9
பரிகாரம்: துர்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்யவும்.
மிதுன ராசிக்காரர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 2-ல் புதன், குருவும், 10-ல் கேதுவும் உலவுவதால் அலைச்சல் வீண்போகாது. நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். கலைஞர்களுக்குப் புகழோடு பொருளும் சேரும். பெண்களுக்கு மன உற்சாகம் பெருகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
வாழ்க்கைத் துணையால் நலம் கூடும். கூட்டாளிகள் உதவுவார்கள். மாணவர்களுக்கு வெற்றிகள் குவியும். உத்தியோகஸ்தர்களது எண்ணம் நிறைவேறும். 5-ல் செவ்வாயும் சனியும் இருப்பதால் வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பிள்ளைகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். கெட்டவர்களின் தொடர்புக்கும் கெட்ட எண்ணங்களுக்கும் இடம் தரக்கூடாது. நேரான பாதையில் செல்வதன் மூலம் நலம் கூடப் பெறலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 1, 3 (முற்பகல்)
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு, வடக்கு
நிறங்கள்: இளநீலம், பச்சை, வெண்மை, மெரூன், பொன் நிறம், மஞ்சள்
எண்கள்: 3, 5, 6, 7
பரிகாரம்: சுப்பிரமணிய புஜங்கம் வாசிப்பதோ, கேட்பதோ நல்லது. சக்தி வழிபாடு நலம் தரும்.
கடக ராசிக்காரர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 12-ல் சுக்கிரன் உலவுவதால் சிறு பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். அதனால் அனுகூலமும் உண்டாகும். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உதவி புரிவார்கள். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். வெளிநாட்டுத் தொடர்பு வலுக்கும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
ஜன்ம ராசியில் சூரியனும், 4-ல் செவ்வாயும் சனியும் உலவுவதால் உடல்நலம் பாதிக்கும். கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களால் தொல்லைகள் சூழும். தாய் நலனில் அக்கறை தேவை. சொத்துக்கள் தொடர்பான பணிகளில் விழிப்புடன் இருக்கவும். வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. வாரப்பின்பகுதியில் பிள்ளைகள், வாழ்க்கைத்துணையால் ஓரிரு நன்மைகள் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 1, 3 (முற்பகல்)
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெண்மை, சாம்பல் நிறம்
எண்கள்: 4, 6
பரிகாரம்: சனிப் பிரீதி செய்யவும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவும். அனுமன் சாலீஸா சொல்வது நல்லது.
சிம்ம ராசிக்காரர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், சனி, 11-ல் சுக்கிரன் உலவுவது சிறப்பு. மனத்துணிச்சல் கூடும். எதிரிகள் விலகுவார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நிலபுலங்கள் சேரும். கலைத்துறையினருக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவும். பெண்களின் எண்ணம் நிறைவேறும். கணவன்-மனைவி உறவு நிலை திருப்தி தரும்.
ராசிநாதன் சூரியன் 12-ல் புதன், குரு ஆகியோருடன் கூடியிருப்பதாலும், 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் உலவுவதாலும் சிறுசிறு இடர்ப்பாடுகள் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. வியாபாரிகளுக்கு சறுக்கல் உண்டாகும். எனவே அகலக்கால் வேண்டாம். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும். கண்சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 1, 3 (முற்பகல்)
திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, மேற்கு
நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை
எண்கள்: 6, 8, 9
பரிகாரம்: சூரிய வழிபாடு அவசியம். கண் பார்வையற்றவர்களுக்கு உதவவும். துர்கைக்கு நெய்தீபம் ஏற்றவும்.
கன்னி ராசிக்காரர்களே
உங்கள் ராசிக்கு 11-ல் சூரியனும் புதனும் குருவும் உலவுவதால் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். அரசு உதவி கிடைக்கும். நிர்வாகத்திறமை கூடும். தொழிலில் வளர்ச்சி காண வழிபிறக்கும். வேலையில்லாதவர்களுக்குத் வாய்ப்புக் கூடிவரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.
வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் அலைச்சல் கூடும். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. வீண்சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். கண், வாய், முகம் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 1, 3 (முற்பகல்)
திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, வடக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெண்மை, இளநீலம், பச்சை, ஆரஞ்சு, பொன் நிறம்
எண்கள்: 1, 3, 5, 6
பரிகாரம்: திருமுருகனை வழிபடவும். நாக வழிபாடு நலம் தரும்.