ஆன்மிகம்

ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு

செய்திப்பிரிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று சனிக்கிழமை என்பதால் வழக்கத்துக்கு மாறாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதனால், நேற்று காலை நிலவரப்படி சுவாமியை தர்ம தரிசனம் வாயிலாக சென்று தரிசிக்க 24 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை சுவாமியை 73,572 பேர் தரிசித்தனர். இதில், 29,448 பக்தர்கள் தலைமுடியை, காணிக்கையாக செலுத்தியுள்ளனர். உண்டியல் மூலம் வருவாய் ரூ. 3.73 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

திருமலையில் நாளை 3-ம் தேதி இரவு இரவு 7 மணிமுதல் 9 மணி வரை பவுர்ணமி கருட சேவை நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.

SCROLL FOR NEXT