வத்திராயிருப்பு: ஆனி மாத பவுர்ணமி வழிபாட்டுக்காக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஜூலை 1 முதல் 4-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் சதுரகிரி மலை அமைந்துள்ளது. இங்குள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களின் தரிசனத்துக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேற வனத் துறை அனுமதி வழங்குகிறது.
ஆனி மாத பவுர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு ஜூலை 1 முதல் 4-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து காலை 7 முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என வனத் துறை அறிவித்துள்ளது.