டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக, உலகக் கோப்பை முடிந்தபின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்திருந்தார். ஆனால், அதன்பின் ஒருநாள் தொடருக்கான அணிக்கான கேப்டன் பதவியிலிருந்து கோலி நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் இந்திய டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் ராஜினாமா செய்திருக்கிறார்.
கோலியின் ராஜினாமா இந்திய கிரிக்கெட் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..
Raja_Talks
முதல்ல மகேந்திர சிங் தோனி,இப்போ விராட் கோலி பலி
Registered sign
இன்றைய கோலி டெஸ்ட் கேப்டன்சி விலகலுக்கும் சம்பந்தம் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா ??
டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிநாடியை உயிர்ப்புடன் வைக்கச் செய்திருக்கும் ஆகச்சிறந்த கேப்டன், தனது பணியை விட்டுச் செல்கிறார்.
வேடன்
இவங்கள எல்லாம் சமாளிச்சு இவ்ளோ நாள் கேப்டனா இருந்து, அத்தனை சாதனைகள், அவ்ளோ கப் அடிக்க முடிஞ்சுது எல்லாம் கண்டிப்பா வேற லெவல் தான்.
இது தோனி அன்ட் கோலி ரெண்டு பேருக்கும் பொருந்தும்.
லாரிக்காரன்
எனக்குத் தெரிஞ்சு கிரிக்கெட் வரலாற்றில் எல்லா கேப்டன்களும் ஸ்டெப் டவுன் ஆகும்போது கிரிக்கெட் போர்டு மேல நிறைய விமர்சனங்கள் மட்டுமே வந்திருக்கு. இப்ப கோலி விலகலும் அவ்வாறே !!. இதற்கு விதிவிலக்கு ரவி சாஸ்திரி ஸ்டெப் டவுன் ஆகும்போது ரசிகர்கள் சந்தோஷப் பட்டதா நினைவு..
Naniiiii
நீங்கள் சிறந்த கேப்டனாக எப்போதும் இருப்பீர்கள்
Ali Martin
ஒரு சகாப்தத்தின் முடிவு... இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் கொண்டு வந்த ஆர்வம் தொடரும் என்று நம்புவோம்
ℳsd Kutty
தோனி பத்தி கோலி சொன்ன வார்த்தைகள் இன்னமும் நினைச்சிட்டே இருக்க தோனுது.. இப்டி ஒரு விசுவாசி கிரிக்கெட் உலகம் கண்டிருக்காது..
Dr.Aravind Raja
உண்மையிலேயே கோலி ரொம்ப பாவம்.. இந்த பிசிசிஐ அரசியலுக்கு பலியாயிட்டாப்ல..
Syed Khaleel
கிரிக்கெட்டில் சாதனைகளை செய்த கபில்தேவ், அசாருதீன், தோனி, போன்றவர்களை பெரும் அவமானத்துடன் தான் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வந்துள்ளது. இதில் கோலி மட்டும் விதிவிலக்கா என்ன?..
கோலி தொடர்ந்து ஆட வேண்டும், எல்லா சாதனைகளையும் அடித்து நொறுக்கும் வரை ஆட வேண்டும்.