சமூக வலைதளம்

பந்தை எறிந்த இங்கிலாந்து ரசிகர்கள்; சைகையில் பதிலடி தந்த சிராஜ்: வைரல் வீடியோ

செய்திப்பிரிவு

தன் மீது பந்தை எறிந்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு, இந்திய அணியின் வேகப்பந்துவீச்ச்சாளர் முகமது சிராஜ் சைகை மூலம் பதிலடி தந்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாளான நேற்று இந்திய அணி வெறும் 78 ரன்களுக்கு அத்தனை விக்கெட்டுகளையும் இழந்தது. களத்தின் தன்மையைச் சரியாகக் கணிக்க முடியாத பேட்டிங், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சு காரணமாக இந்திய அணியினர் மோசமாக விளையாடினர்.

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை இங்கிலாந்து அணி வலுவான தொடக்கத்துடன் விளையாடி வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி விளையாடும்போது, சிராஜ் மீது இங்கிலாந்து ரசிகர்கள் பந்தை எறிந்து சத்தமிட்டனர். இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் சிராஜ் நாங்கள் இந்த டெஸ்ட் தொடரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பதாக சைகையில் தெரிவித்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

SCROLL FOR NEXT