'க்ளப் ஹவுஸி'ல் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸுக்கான '24 - 24 - 24' உரையாடல் இன்று காலை 9 மணி முதல் தொடங்குகிறது.
'கிளப் ஹவுஸ்' என்கிற அரட்டைச் செயலியில் அரசியல், சமூகம், சினிமா, தொழில் தொடங்கி, அனைத்தும் பேசப்பட்டு வருகிறது. இது, ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் உரையாடுவதற்கான வசதியை அளிக்கும் சமூக வலைதளச் செயலியாகும்.
தற்போது இந்தியா உள்பட பல நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான பயனர்களை இந்தச் செயலி பெற்றுவருகிறது. இருப்பிடத்தை வைத்துப் பொதுவான விருப்பங்கள் கொண்டவர்களை இணைக்கும் செயலியாகும்.
குரல்வழி உரையாடலின் மூலமாகப் பயனாளர்கள் இடையே நேரடிப் பிணைப்பை உருவாக்குவதே 'கிளப் ஹவுஸி'ன் நோக்கமாக உள்ளது.
Tamil Business People என்ற பெயரில் 'ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸு'க்காக இன்று (ஜூலை 03) காலை 9 மணிக்கு தொடங்கி, நாளை (ஜூலை 4) காலை 9 மணி, 24 நிமிடம், 24 நொடிக்கு இந்த உரையாடல் முடிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டு, தற்போது, இது 40 மணிநேரத்தைக் கடந்து தொடர்ச்சியாக நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உரையாடலில், தொழில் முனைவோர்கள் குமாரவேல், 'டேலண்ட் ஃபேக்டரி' சிஇஒ, சுரேகா சுந்தர், 'நீயா நானா' கோபிநாத், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜா, பாரதி பாஸ்கர், ஸ்ரீனிவாச ராஜா, மருத்துவர் பிரதீபா சுதாகர் உள்ளிட்டோர் உரையாட உள்ளனர்.
இதனை தாமோதரன், சுரேஷ் ராதாகிருஷ்ணன், சக்திவேல் பன்னீர்செல்வம், முத்துகுமார் ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர். இந்த நிகழ்வுக்கான இணையமுகவரி https://www.clubhouse.com/event/myl822NL, மேலும் www.242424VBS.Com என அறிவிக்கப்பட்டுள்ளது.