தான் ஏலத்தில் எடுக்கப்பட்டதை பார்த்துக் கொண்டிருக்கும் ஷாருக் கான் 
சமூக வலைதளம்

பஞ்சாப் அணிக்கு ரூ.5 கோடிக்கு வாங்கப்பட்ட ஷாருக்கான்: கை தட்டி உற்சாகப்படுத்திய தமிழக வீரர்கள்

செய்திப்பிரிவு

தமிழக வீரர் ஷாருக்கான் பஞ்சாப் அணியால் 5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டதற்கு தமிழக கிரிக்கெட் அணி உற்சாகப்படுத்திய வீடியோவை தினேஷ் கார்த்தி வெளியிட்டுள்ளார்.

14-வது ஐபிஎல் போட்டிக்கான ஏலம் சென்னையில் நடந்தது. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் ரூ.16.25 கோடிக்கு, ரூ. 14.25 கோடிக்கு மேக்ஸ்வெல்லும், ரிச்சர்ட்ஸன் ரூ.14 கோடிக்கும் ஏலத்தில் எடுக்ககப்பட்டுள்ளனர்.

இளம் வீரர்களுக்கான ஏலம் நடந்தது. இதில் தமிழக அணி வீரர் ஷாருக்கானுக்கு ரூ.20 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு ஏலம் நடந்தது.

சமீபத்தில் நடந்த முஷ்டாக் அலிக் கோப்பைப் போட்டியில் தமிழக அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல ஷாருக்கானின் ஆட்டம் காரணமாக அமைந்தது. அதிரடியாக ஆடக்கூடிய ஷாருக்கானுக்கு ரூ.5.25 கோடி கொடுத்து பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்த நிலையில் பஞ்சாப் அணி ஷாருக்கானை ஏலத்தில் எடுத்த காட்சியை விஜய் ஹசாரா போட்டிக்கு தயாராகும் தமிழக அணியினர் பார்த்து மகிழ்ந்த வீடியோவையும், ஷாருக் கானை உற்சாகப்படுத்திய வீடியோவையும் தமிழக அணியின் கேப்டன் தினேஷ் கார்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில், கெயில் , ராகுல் வரிசையில் பஞ்சாப் அணிக்கு விளையாட இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT