ஐபிஎல் ஏலத்தில் பந்து வீச்சாளர்கள் பலரும் அதிக விலைக்கு எடுக்கப்பட்டதை கண்டு நீ ஏன் பந்து வீச்சாளராக இல்லை என்று எனது தோழி கேள்வி எழுப்பியதாக இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் பதிவிட்டுள்ளார்.
2021-ம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான மினி ஏலம் சென்னையில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலில் நேற்று நடந்தது. இந்த ஏலத்தில் 164 இந்திய வீரர்கள், 115 வெளிநாட்டு வீரர்கள், 3 துணை நாடுகளின் வீரர்கள் என 292 வீரர்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். 61 இடங்களுக்கு 292 வீரர்கள் ஏலத்தில் போட்டியிட்டதில் இறுதியாக 57 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த ஐபிஎல் போட்டியில் பந்து வீச்சாளர்கள் அதிகமான விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
இதனை குறிப்பிட்டு "எனது தோழி, என்னை பார்த்து நீ ஏன் பந்து வீச்சாளராகவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்” என்று இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்க்ஸ் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து வீரர் சேம் பில்லிங்ஸை டெல்லி அணி 2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.