சமூக வலைதளம்

'வாத்தி கம்மிங்' பாடலுக்கு மைதானத்தில் நடனமாடிய அஸ்வின்

செய்திப்பிரிவு

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிக் கொண்டிருக்குபோது மைதானத்தில் ஒலிபரப்பான 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு அஸ்வின் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல் ஆகியோரின் சுழற்பந்து வீச்சால் சென்னையில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

2-வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாளிலேயே இந்திய அணிக்கு அபாரமான வெற்றி கிடைத்துள்ளது. இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிக் கொண்டிருக்கும்போது மைதானத்தில் 'மாஸ்டர்' திரைப்படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதற்கு அஸ்வின் நடனம் ஆடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

SCROLL FOR NEXT