தோன் ரசிகரின் இல்லம் எனப் பெயரிட்ட ரசிகர் கோபிகிருஷ்ணாவுக்கு தோனி நன்றி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் மேற்குப் பகுதியான திட்டக்குடியை அடுத்த குக்கிராமமான அரங்கூரில் கோபிகிருஷ்ணா என்ற கிரிக்கெட் ரசிகர் தனது வீட்டை மஞ்சள் வண்ணத்திற்கு மாற்றியிருப்பதோடு, தோனி ரசிகரின் வீடு என எழுதி, சிஎஸ்கே அணியின் மீதான ஈர்ப்பையும், தோனியின் மீதான நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். தோனியின் படத்தையும் வரைந்துள்ளார். இந்த வீடியோ வைரலானது.
இந்த நிலையில் அந்த ரசிகருக்கு தோனி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த வீடியோவைச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் தோனி கூறுகையில், “இது எனக்காக மட்டுமல்ல. சிஎஸ்கேவின் ரசிக பலத்தைக் காட்டுகிறது. சிஎஸ்கே ரசிகர்கள் எங்களுக்கு அளிக்கும் ஆதரவு அனைவருக்கும் தெரியும். இது மிக எளிதான விஷயம் அல்ல. அவரின் மொத்தக் குடும்பமும் இதற்குச் சம்மதிக்க வேண்டும். அதன் பிறகுதான் நீங்கள் அதைச் செய்ய முடியும். சமூக வலைத்தளங்களில் போடும் பதிவைப் போன்றது அல்ல. இது எப்போதும் நிலைத்திருக்கும். அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
Thala Dhoni's sweet reaction to the sweetest tribute!