சமூக வலைதளம்

கோவிட்-19 |   25 டிகிரி செல்சியஸுக்கும் அதிக வெப்ப சுடுநீரில் கை கழுவுதல்: கரோனா தடுப்பும் விளக்கமும்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக வழிகாட்டல்கள்

செய்திப்பிரிவு

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் உலகம் முழுதும் கரோனா வைரஸ் தொற்றுக்களை தடம் கண்டு உண்மை நிலவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்தப் பல்கலைக் கழகம் கரோனா வைரஸ் பற்றிய விளக்கத்தையும் தடுப்பு உத்தி வழிகாட்டல்களையும் வெளியிட்டுள்ளது.

அவை வருமாறு:

வைரஸ் வாழும் உயிரி அல்ல. மாறாக புரத மூலக்கூறு (டி.என்.ஏ). இதன் மேற்புறம் மெலிதான கொழுப்புப் படிவினால் ஆனது. இதுதான் அதற்குக் காப்பு. இது கண், மூக்கு, வாய் வழியாக செல்களால் உள்வாங்கப்பட்டு தனது மரபணு குறியை மாற்றம் செய்து கொள்கிறது. இப்படி மாற்றுவதன் மூலம் தன்னை பல்கிப் பெருக்கிக் கொள்கிறது.

வைரஸ் வாழும் உயிரி அல்ல, புரத மூலக்கூறு என்பதால் அதை கொல்ல முடியாது. அது தானாகவே அழிந்துவிடக்கூடியது. அது தானாகவே அழியக்கூடியதற்கான கால அளவு என்பது வெப்ப நிலை, காற்றில் உள்ள ஈரப்பதம், வைரஸ் எந்த இடத்தில் இருக்கிறது என்பதன் தன்மையைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்.

இந்த வைரஸ் எளிதில் முறிகிற அளவுக்கு பலவீனமானதுதான், ஏனெனில் அதன் மெலிதான கொழுப்புப் படிவு மட்டுமே அதனை காக்கிறது. அதனால்தான் சாதாரண சோப் அல்லது எந்த ஒரு டிடர்ஜெண்ட் இதற்கு சிறந்த மருந்தாகிறது. ஏனெனில் சோப், டிடெர்ஜெண்ட் நுரை வைரஸின் மேற்புறக் கொழுப்பை கட் செய்கிறது. இதனால்தான் 20 விநாடிகள் நுரை வரும் வரை கழுவுதல் அவசியமாகிறது. வைரஸின் மேற்புற கொழுப்புப் படிவு கரைக்கப்பட்ட பிறகு புரத மூலக்கூறு கலைந்து தானாகவே முறிந்து விடும்.

உஷ்ணம் கொழுப்பை உருக்கி விடும்.; ஆகவேதான் 25 டிகிரி செல்சியஸுக்கும் கூடுதலான வெப்பநிலை கொண்ட சுடுநீரில் கைகளை, துணிகளை, ஏன் அனைத்தையும் கழுவுதல் பயன் தரும். மேலும் வெந்நீர் நுரையை உருவாக்குவதால் கூடுதல் பயனே.

ஆல்கஹால் அல்லது 65%-க்கும் அதிகமாக ஆல்கஹால் கலந்துள்ள எந்த ஒரு கிருமி நாசினியும் வைரஸ் கொழுப்பு மேற்புறத்தை கரைத்து விடும். அதாவது ஒரு பங்கு கிருமி நாசினி 5 பங்கு சுடுநீர் கழுவுவதற்குப் போதுமானது.

வைரஸை அழிக்க பாக்டீரியா தொற்றுக்குக் கொடுக்கப்படும் மருந்துகள் உதவாது. ஏனெனில் பாக்டீரியா போல் வைரஸ் வாழும் உயிரி அல்ல. ஆன்ட்டிபயாட்டிக்குகள் கொண்டு பாக்டீரியாவை அழிப்பது போல் வைரஸ்களை அழிக்க முடியாது.

வெளிக் குளிரில் வைரஸ் மூலக்கூறு நிலையாக இருக்கும் தன்மைக் கொண்டது, அது நிலையாக இருக்க காற்றில் உள்ள ஈரப்பதமும் உதவும். எனவே ஈரப்பதமற்ற, வறண்ட, உஷ்ண, வெளிச்சமான சூழ்நிலைகளில் வைரஸ் விரைவில் அழிந்து விடும்.

அல்ட்ரா வயலெட் ஒளி வைரஸ் புரோட்டீனை சிதைக்கக் கூடியது. உதாரணமாக பயன்படுத்திய முகக்கவசத்தை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்துவது நலம். ஆனால் இதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் இது சருமத்தில் உள்ள கொலாஜன் என்ற புரோட்டீனை கரைத்து விடலாம்.

ஆரோக்கியமான சருமத்தினை வைரஸ் ஊடுருவ முடியாது. பயன்படுத்திய துணி, போர்வை, துண்டு ஆகியவற்றை உதறுதல் வேண்டாம்.

வினீகர் பயன் தராது ஏனெனில் அது வைரஸின் மேல்புற கொழுப்பை கரைக்கப் போதுமானது அல்ல.

வீட்டின் கதவுகளை அடைத்து வைத்திருக்கும் சூழ்நிலை வைரசுக்கு தோதானது, நல்ல காற்றோட்டமான, வெளிச்சம், உஷ்ணம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். நகங்களை வெட்டி சிறியதாக வைத்துக் கொள்வது நலம் ஏனெனில் வைரஸ் அங்கு ஒளிந்து கொள்ள முடியாது.

SCROLL FOR NEXT