சமூக வலைதளம்

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்திய கோலி

செய்திப்பிரிவு

கொல்கத்தாவில் உள்ள காப்பகக் குழந்தைகளை மகிழ்ச்சி அடையச் செய்வதற்காக, கோலி கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சென்றார்.

இந்திய அணியின் கேப்டன் கோலி கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த வீடியோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ளது. அவ்வீடியோவில் தங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீரர்கள் மற்றும் சூப்பர் ஹீரோக்கள், அவர்களுக்கு வேண்டிய பரிசுப் பொருட்கள் குறித்துக் குழந்தைகள் கூறியிருப்பார்கள்.

அவ்வீடியோவைப் பார்க்கும் கோலி, கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து அக்குழந்தைகளின் பிரார்த்தனை அரங்குக்குள் நுழைகிறார். அப்போது கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டிருப்பது கோலிதான் என்று தெரியாத குழந்தைகள், அவர் அளிக்கும் பரிசுப் பொருட்களை மகிழ்ச்சியாகப் பெற்றுக் கொள்கின்றனர்.

இறுதியாக கோலி கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தைக் கலைக்கிறார். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டிருப்பது கோலி என்று தெரிந்ததும் குழந்தைகள் அளவற்ற மகிழ்ச்சி அடைகின்றனர். இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

SCROLL FOR NEXT