சமூக வலைதளம்

நெட்டிசன் நோட்ஸ்: நடிகர் பாலா சிங் மறைவு - நல்லதோர் கலைஞர் 

செய்திப்பிரிவு

'அவதாரம்', 'இந்தியன்', 'ராசி', 'புதுப்பேட்டை', 'விருமாண்டி', 'என்.ஜி.கே', 'மகாமுனி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துப் பிரபலமான பாலா சிங் காலமானார். அவருக்கு வயது 67. அவரின் மறைவுக்கு நெட்டிசன்கள் தங்கள் இரங்கலைப் பதிவு செய்துள்ளனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

M. Prasanna Kumar

வெங்கிராம்

ராசுக்காளை கதாபாத்திரத்தில் தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்திய பாலா சிங்.

#விருமாண்டி


தளபதி ராம்

திரையுலகில் நல்ல
குணச்சித்திர நடிகர்
பாலா சிங் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு.

கலை உள்ளவரை நீவீர் இருப்பீர்!

àrâvínd

பன்முகத்திறமை கொண்ட நடிகர் பாலா சிங் இன்று அதிகாலை 1 மணிக்கு இறந்தார். 'அவதாரம்' படத்தில் நாசரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். 'புதுப்பேட்டை', 'விருமாண்டி' போன்ற படங்களில் ஜொலித்தார். தமிழ்த் திரையுலகம் ஒரு நல்ல தேர்ச்சி பெற்ற நடிகரை இழந்தது. #BalaSingh sir.


Muruganandham Arumugham

ஆழ்ந்த அனுதாபங்கள்...
மிகச் சிறந்த நடிகர் பாலா சிங்கின்
ஆன்மா இறைவனின்
நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறோம்.

Mano

உடல்நலக் குறைவால் பிரபல நடிகர் பாலா சிங் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

நல்லதோர் கலைஞர் !!!

ஆழ்ந்த இரங்கல்..!!


தங்கமணி

பாலா சிங் அற்புதமான நடிகர். இயற்கை எய்திய அவருக்கு அஞ்சலி!


Rajesh R

தமிழ் சினிமாவில் உள்ள சில அருமையான நடிகர்களில் ஒருவர், மிடுக்கான குரல் வளத்துக்குச் சொந்தக்காரர் பாலா சிங் காலமானார்...

டீ

RIP பாலா சிங். அவதாரத்தில் ராஜபார்ட்டாக நாசர் மூலம் வெளிச்சத்திற்கு வந்த நல் கலைஞர். தமிழ் சினிமாவில் ஏராளமான குணச்சித்திர வேடங்களை ஏற்றுச் சிறப்பித்தவர்.

கிருஷ்ணன்

நடிகர் பாலா சிங்கை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

SCROLL FOR NEXT