சந்தீப் வாங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'அர்ஜுன் ரெட்டி'. இதன் இந்தி ரீமேக்கும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் நடிக்க 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் உருவாகியுள்ளது.
'அர்ஜுன் ரெட்டி' படத்தில் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாயா இயக்கியுள்ளார். பனிட்டா சந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் த்ருவ் விக்ரமுடன் நடித்துள்ளனர்.
இப்படம் இந்த வாரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
Lakshmanadass
நோ லவ்
நோ பெய்ன்
bharathi
ஒரு மனுஷன்
பிறக்கிறது
அன்பு செலுத்துறது
இறக்கிறது எல்லாம் 10% தான்
மத்த 90% அவர்கள் பற்றிய தருணங்களின் நினைவுகள் மட்டும் தான் - ஆதித்ய வர்மா
சிவசெல்வம் குடும்பர்.....
ஆதித்ய வர்மா
த்ருவ் என்ட்ரி சீன் தெறி
த்ருவ் கோவப்படுற சீன்.. படம் முழுசும் த்ருவ்தான்... இன்டர்வல்
வரைக்கும் ஒவ்வொரு சீனும் மாஸ் , கெத்துதான்.
செகண்ட் ஆப் கொஞ்சம் ஸ்லோ.
ஒன் மேன் ஷோ த்ருவ்.
கில்லாடி™
முதல் படம் மூலம் சினிமாவில் பெயர் எடுத்தவர்கள்
சிவாஜிக்கு ஒரு பராசக்தி
கார்த்திக்கு ஒரு பருத்திவீரன்
த்ருவுக்கு ஒரு ஆதித்ய வர்மா...
குழந்தை அருண்
த்ருவ் விக்ரம் >>>>>>> விஜய் தேவர கொண்டா
ஆதித்ய வர்மா >>>>>>> அர்ஜுன் ரெட்டி
தளபதி
செம...
த்ருவ் விக்ரம் மெரட்டி இருக்காரு நடிப்புல...
ஹுரோயின் செட் ஆகல.. வேற யாரயாவது நடிச்சிருந்தா இன்னும் செமயா இருந்திருக்கும்...
chu_chu
முதல் படத்திலேயே வெற்றிப் பாதையை அமைத்த விக்ரம் மகன் த்ருவ்...!