தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3-ன் வெற்றியாளராக பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளருமான ராகுல் சிப்லிகஞ்ச் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியாவின் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குத் தனி இடம் உண்டு. பார்வையாளர்களிடம் மிகப் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தது. இதன் வெற்றியாளராக முகின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் 3 இறுதி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ’ஸ்டார் மா’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இறுதி நிகழ்ச்சியில் சீரஞ்சிவி உள்ளிட்ட பிரபல தெலுங்கு நடிகர்கள் கலந்து கொண்டனர்.
தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3-ன் வெற்றியாளராக பின்னணிப் பாடகர் ராகுல் சிப்லிகஞ்ச் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 'ரங்கஸ்தலம்' உள்ளிட்ட பல தெலுங்குப் படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். இரண்டாம் இடம் பிரபலத் தொகுப்பாளினியான ஸ்ரீ முகிக்கு கிடைத்தது.
தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நடன இயக்குநர் பாபா பாஸ்கரும் போட்டியாளராகக் கலந்து கொண்டார். இறுதிப் போட்டியில் பாபா பாஸ்கருக்கு மூன்றாம் இடமும், நடிகர் வருண் சந்திஷுக்கு நான்காம் இடமும் கிடைத்தது.
தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.