தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு முதல் அறிகுறியாக இப்போதே மாலை நேரங்களில் ஆங்காங்கே வெடிச்சத்தங்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. சிறுவர்களும், சிறுமிகளும் கையில் மத்தாப்புகளுடன் வலம் வருகிறார்கள்.
இந்த ஆண்டு சிறுவர்களைக் கவரும் வகையில் வீடியோ கேம் பெயர்களைக் கொண்ட டெம்பிள் ரன், கிளாஸ் ஆஃப்-கிளான்ஸ், ஆங்ரி பேர்டு பெயரில் பட்டாசுகள், சமூக வலைதளங்களான ட்விட்டர், ஸ்கைப், டிக்-டாக், பப்பு ஆகிய பெயர்களில் பட்டாசுகள், தமிழகத்தின் பாரம்பரியத்தை எடுத்துக்கூறும் ஜல்லிக்கட்டு பெயரில் வந்துள்ள பட்டாசு, போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் ஐஸ்ஏஜ், ஹல்க், ஒன்டர்பார்க், கும்கி, பாகுபலி, தண்டர், போகோ, குர்குரே, பிங்கோ ஆகிய பிரபல திரைப்படங்களின் பெயர்களைக் கொண்ட பட்டாசு மற்றும் மத்தாப்பு வகைகள் இந்த ஆண்டு புது வரவாக உள்ளன. ஒரே கம்பி மத்தாப்பில் 3 மற்றும் 4 வண்ணங்களை உமிழும் வகை யில் புது வரவாக டிரை கலர், மல்டி கலர் கம்பி மத்தாப்புகளும் விற்பனைக்கு வந்துள்ளன.
இந்நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கையாள வேண்டிய வழிமுறைகளை மீம்ஸ் நாயகான வடிவேலுவை வைத்து விழிப்புணர்வு மீம்ஸாக கிட்டு என்பவர் உருவாக்கியுள்ளார்.
கிட்டுவின் மீம்ஸ் வாசகர் பார்வைக்காக...