சமூக வலைதளம்

இந்தக் குரங்கிடம் கற்றுக் கொள்வோம்: 'தண்ணீர் சிக்கனம்' பாடம்; வைரல் வீடியோ

செய்திப்பிரிவு

காலையில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் சமூக வலைதளங்களைப் பார்த்தால் நிச்சயமாக ஏதேனும் ஒன்று ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும். அந்த வரிசையில் இன்றைய ட்ரெண்ட் தண்ணீர் வீணாவதைத் தடுக்க முயலும் குரங்கு.

ஆம், நமக்கெல்லாம் துன்பம் வரும்போது மட்டும்தான் சிக்கனம் நினைவுக்கு வரும். நம்மில் சிலர், ஊரில் தண்ணீர் கஷ்டமா உடனே பார்த்து பார்த்து தண்ணீர் செலவு செய்வோம். கையால் துணி துவைப்போம், இந்தியக் கழிவறைக்கு மாறுவோம், ஷவரைத் தவிர்ப்போம், பக்கெட் தண்ணீரில் தலைக்கு ஷாம்பூ போட்டே குளித்துவிடுவோம். அரசாங்கத்தையும் அதிகாரிகளையும் மட்டுமே குறை சொல்வோம். அதேநேரத்தில் இயல்பு சற்றே திரும்பினால்கூட போதும் சிக்கனம் எங்கோ காணாமல் போயிருக்கும். அடுத்த கோடை வரும்வரை கவலையில்லாமல் தண்ணீர் செலவழிப்போம்.

பல் தேய்த்து முடிக்கும் வரை வாஷ் பேசின் குழாய் கதறிக்கொண்டு தண்ணீரைப் பாய்ச்சும். கேட்காததுபோல் இருப்போம். சீசனுக்கு சீசன் தாவும் நம் மனத்துக்கு மரத்துக்கு மரம் தாவும் குரங்கு நல்பாடம் நல்கியிருக்கிறது. காணொலியைப் பாருங்கள் புரியும்.

உண்மையில் அந்தக் குரங்குக்கு தண்ணீர் சிக்கனத்தின் அவசியம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தேவையில்லாமல் தண்ணீர் குழாயில் இருந்து வெளியேறுவது கூடாது என்ற எண்ணம் மட்டும் அதற்கு இருந்திருக்க வேண்டும். இலையைக் கொண்டு குழாயை மூட முயலும் குரங்கின் செயல் அபாரம்.

இந்தக் குரங்கு போல் நாமும் தண்ணீர் விஷயத்தில் கவனமாக இருக்கலாமே. பொதுநலம் கருதிச் செயல்படுவோம்.

SCROLL FOR NEXT