ஜப்பான் ஓப்பன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பதற்காக தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஜோகோவிச் அந்நாட்டுக்குச் சென்றுள்ளார்.
ஜப்பானின் பாரம்பரிய விளையாட்டுகளுள் சுமோ மல்யுத்தமும் ஒன்று . இந்த நிலையில் சுமோ மல்யுத்தக் களத்தில் நின்று, சுமோ வீரர் ஒருவருடன் ஜோகோவிச் மல்யுத்தம் செய்யும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
சுமோ வீரருடன் மல்யுத்தம் செய்த அனுபவம் குறித்து ஜோகோவிச் கூறும்போது, “சுமோ வீரர்களுடன் இருந்தது எனக்குப் பெருமையாக இருந்தது. நான் அந்த சுமோ வீரரை ஒரு அடி நகர்த்தினேன். அவர்கள் ஒரு நாளைக்கு 10,000 கலோரிகளைக் கொண்ட உணவை உண்கிறார்கள். நான் 90களில் எனது தந்தை மற்றும் சகோதரர்களுடன் இணைந்து வீட்டிலிருந்து மல்யுத்த வீரர் அகிபோனா யோகோசுனாவை உற்சாகப்படுத்துவோம். அவர் தற்போது எங்கே இருக்கிறார். அவரிடம் நான் எவ்வளவு பெரியவனாகிவிட்டேன் என்று காட்ட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
Ready? Play.