சமூக வலைதளம்

கர்நாடக மக்களின் பாராட்டை பெற்ற போக்குவரத்து போலீஸ் அதிகாரி 

செய்திப்பிரிவு

கர்நாடகவில் நிர் தேங்கிய சாலையை சரி செய்த போக்குவரத்து போலீஸ் அதிகாரிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு பெருகி வருகிறது.

கர்நாடகவில் சாலை ஒன்றில் தண்ணீர் தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதனைத் உணர்ந்த போக்குவரத்து துறை போலீஸ் அதிகாரி ஒருவர் சற்று யோசிக்காமல் மண்வெட்டியை எடுத்து சாலையில் தேங்கிய தண்ணீர் செல்ல சாலையின் ஓரத்தில் பள்ளம் தோண்டினார். இதன் காரணமாக அப்பகுதியில் வாகனங்கள் செல்வது சற்று எளிதானது.

இந்த நிலையில் இது தொடர்பான வீடியோவை அக்‌ஷய் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி பகிர்ந்ததை தொடர்ந்து அவ்வீடியோ வைரலானது.

பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து சாலையில் தண்ணீர் போக வழி செய்த போலீஸ் அதிகாரிக்கு பாராட்டு தெரிவித்தனர். பாராட்டு தெரிவித்ததில் போலீஸாரும் அடக்கம்.


மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உரிய பாராட்டை அளிக்குமாறும் பெங்களூர் போக்குவரத்து துறைக்கு வேண்டுகோள் பெங்களூர் நெட்டிசன்கள் வைத்தனர்.

SCROLL FOR NEXT