சமூக வலைதளம்

என்னை எதற்கு புகைப்படத்திலிருந்து கட் செய்தீர்கள்? கோபித்துக் கொண்ட சாஹல்

செய்திப்பிரிவு

என்னை எதற்காக புகைப்படத்திலிருந்து கட் செய்தீர்கள் என்று ரோஹித் மனைவியை இந்திய சுழற்பந்துவீச்சாளர் சாஹல் கிண்டல் செய்த பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களால் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா ரோஹித். இவர் கணவர் ரோஹித் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

மேட்ச் முடிந்து ரோஹித் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதைக் குறிப்பிடும் வண்ணம் 'ஒன்று சேர்ந்துவிட்டோம்' என்று ரித்திகா பதிவிட்டிருந்தார். இந்தப் புகைப்படத்தின் கீழ் இந்திய சுழற்பந்துவீச்சாளர் சாஹல், “அண்ணி என்னை ஏன் குடும்பப் படத்திலிருந்து கட் செய்தீர்கள் என்று” என்று இன்ஸ்டாகிராமில் கேட்டார்.

இதற்கு ரித்திகா, ''நீங்கள் இப்படத்தில் இருந்தால் எங்களைவிட நீங்கள்தான் அதிகம் கவனிக்கப்படுவீர்கள்'' என்ற தொனியில் பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் சாஹலை நகைச்சுவையாக கிண்டல் செய்தனர்.

ரோஹித் சர்மாவும், சாஹலும் இந்திய அணியில் மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் நீண்ட காலமாக ஒன்றாக விளையாடி வருகின்றனர்.

இதன் காரணமாக கிரிக்கெட் விளையாட்டைத் தாண்டி இருவரும் சகோதரர்களாகப் பழகி வருவதை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டியுள்ளனர்.

SCROLL FOR NEXT