தண்ணீர் பற்றாக்குறை உலகெங்கிலும் நிலவி வரும் சூழ்நிலையில் தண்ணீர் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, மணல் சிற்பம் ஒன்றை வடித்திருக்கிறார் சுதர்சன் பட்நாயக் .
மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசாவைச் சேர்ந்தவர். சமூகப் பிரச்சினைகளை மையப்படுத்தி, மணல் சிற்பங்களை வடிவமைப்பதில் கைதேர்ந்தவரான இவர், இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் சுதர்சன் பட் நாயக்கின் மணல் சிற்பத்திற்கென்று தனிப்பட்ட ரசிகர் கூட்டமும் உள்ளது.
ஆப்பிரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், தென் அமெரிக்க நாடுகளில், ஆசியக் கண்டம், கொரியா என உலகின் அனைத்து பகுதிகளிலும் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது.
இந்தியாவில் சென்னை உட்பட பல பெரு நகரங்களில் நிலத்தடி நீர் வறண்டு கடும் வறட்சி எற்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் மழை நீரைச் சேகரிக்க விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
இந்நிலையில் தண்ணீர் பற்றாக்குறை குறித்தும், அதன் சேகரிப்பை உணர்த்தும் வகையிலும் மணல் சிற்பத்தை வடித்திருக்கிறார் சுதர்சன். வாளியிலிருந்து தண்ணீர் கொட்டுவதை மணலில் தத்ரூபமாக வடித்திருக்கிறார்..