சமூக வலைதளம்

பஹாமஸைத் தாக்கிய டோரியன் புயல் பாதை குறித்து பகிரப்பட்ட வீடியோ உண்மையா?

செய்திப்பிரிவு

பஹாமஸைத் தாக்கி அமெரிக்காவை நோக்கி நகரும் டோரியான் புயல் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ போலியானது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

கரிபீயன் தீவுகளில் உள்ள பஹாமஸ் மற்றும் அபகோ தீவுகளை டோரியான் புயல் செவ்வாய்க்கிழமை தாக்கியது. இதில் பெரும் சேதம் பஹாமஸ் தீவுக்கு ஏற்பட்டது இந்தத் தலைமுறைக்கான பேரழிவை இந்தப் புயல் விட்டுச் சென்றிருக்கிறது என்று டோரியன் தாக்கம் குறித்து பஹாமஸின் பிரதமர் கூறியிருந்தார்.

இந்நிலையில் டோரியான் புயலுக்கு பஹமாஸில் 43 பேர் பலியாகினர். சுமார் 70 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பஹாமஸ் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டோரியான் புயல் பஹாமஸைத் தாக்கிய நிலையில், அடுத்து அமெரிக்காவை நோக்கி நகரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோ உண்மை என அதிக அளவில் பகிரப்பட்டது.

இந்த வீடியோவை Physics-astronomy.org என்ற ட்விட்டர் பக்கம் பதிவிட்டது. சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இதைப் பார்த்தனர். 90 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் டோரியான் புயலின் பாதை குறித்து பகிரப்பட்ட வீடியோ போலியானது எனத் தெரியவந்தது.

இந்த வீடியோ அமெரிக்காவைச் சேர்ந்த பிரிண்ட் ஷாவ்னோர் என்பவர் உருவாக்கியுள்ளார். இதனை பிரிண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது டோரியான் புயலின் அனிமேஷன் வடிவம் என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT